×

டாஸ்மாக்கில் மோதல் பீர் பாட்டிலால் இருவருக்கு குத்து வாலிபர் கைது

ஆவடி: ஆவடியை அடுத்து திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர்(46). இவர், சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஆவடியில் உள்ள மதுபான கடையில் இவரும் இவரது, நண்பர் சதீஷ் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் குடிபோதையில் பாஸ்கர் மற்றும் சதீஷ் இடம் வீண் தகராறில் ஈடுபட்டு, கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சதீஷை குத்திவிட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து, ஆவடி போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், கோவில் பதாகையை சேர்ந்த செல்வக்குமாரை(26) கைது செய்தனர். லட்சுமிபதி(33) குமார் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post டாஸ்மாக்கில் மோதல் பீர் பாட்டிலால் இருவருக்கு குத்து வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Avadi ,Bhaskar ,Tirumullaivayal Saraswati Nagar ,Chenneerkuppam ,Tasmac clash ,Dinakaran ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...