×

சென்னையில் நேற்று கனமழை பெய்த போதிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று பெய்த போதிலும், சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது;

* சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவு மிக கனமழை நேற்று (29/11/2023) பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் முதலமைச்சர் அறிவுரையின் படி தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது.

* கனமழையினால் 8 மின்பாதைகளில் பழுது ஏற்பட்ட போதிலும் உடனடியாக மாற்றுப்பாதையில் சுமார் அரை மணி நேரத்தில் மின்னுாட்டம் வழங்கப்பட்டு, பழுதுகளும் சரிசெய்யப்பட்டது.

* சென்னையில் உள்ள 41,311 மின்மாற்றிகளில் 2 மின்மாற்றிகள் மட்டும் பழுது ஏற்பட்டது. அவைகளும் உடனடியாக பழுதுகள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

* சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேற்கிய பகுதிகளளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் தற்போது மேற்படி பகுதிகளில் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது- என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் நேற்று கனமழை பெய்த போதிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Gold South ,Narasu ,Gold South India ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...