×

கிராமத்து கத்தரிக்காய் பொடிக்கறி

தேவையான பொருட்கள் : .

கத்தரிக்காய் – 3 cup
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 5
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தாள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ¼ டேபிள் ஸ்பூன்
நல்எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை : .

கத்தரிக்காய் பொடிக்கறி செய்ய முதலில் நறுக்கிய கத்தரிக்காயுடன் சிறிது தண்ணீரும், மஞ்சள் தூளும் சேர்த்து, 5 நிமிடங்கள் மூடிய வாணலிலில் வேக விட வேண்டும்.
பருப்புகள், மிளகாய் வற்றல், தேங்காய் ஆகியவற்றைச் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து மிக்சியில் கொர கொரவென்று பொடித்துக் கொள்ள வேண்டும். கத்தரிக்காயில் தண்ணீர் சுண்டி விட்டு, கத்தரிக்காய் வெந்து வரும் போது மிக்சியில் பொடித்த கலவையும், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து, திறந்த பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து இறக்க வேண்டும். சுவையான கத்தரிக்காய் பொடிக்கறி ரெடி.

 

 

The post கிராமத்து கத்தரிக்காய் பொடிக்கறி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...