×

‘சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட்டணி’; ஹஜ் பயணத்திற்கான நிதியை பாஜ அரசு நிறுத்தி விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்: சேலம் டவுன் ஈஸ்வரன் கோயில் அருகேயுள்ள லால் மகாலில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

“சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பாரதிய ஜனதா கட்சியில் இருந்தோம். தற்போது அதில் இருந்து வெளியே வந்து விட்டோம். பாஜகவின் கொள்கை வேறு. அதிமுகவின் கொள்கை வேறு. எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து அதிமுக விலகாது.

பாஜக அரசு ஹஜ் பயணத்திற்கான நிதியை நிறுத்தி விட்டது. நான் முதல்வராக இருந்தபோது அதற்கான நிதியை கொடுத்தேன். ரமலான் நோன்பு நாட்களில் இஸ்லாமிய மக்கள் கஞ்சி காய்ச்சுவதற்காக ஆண்டுக்கு 5145 மெட்ரிக் டன் அரிசியை ஜெயலலிதா வழங்கினார். அது தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் உலமாக்கள் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கினேன்” இவ்வாறு அவர் பேசினார்.

The post ‘சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட்டணி’; ஹஜ் பயணத்திற்கான நிதியை பாஜ அரசு நிறுத்தி விட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP govt ,Haj ,Edappadi Palaniswami ,Salem ,Lal Mahal ,Iswaran Temple ,Salem Town ,AIADMK ,General ,Edappadi ,BJP government ,Hajj ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்