×

கிராமப்புற செழிப்பை மேம்படுத்தும் மாபெரும் முயற்சியில் எஸ்எஸ்டி மற்றும் எஸ்எம்எம்பிசிஎல் நிறுவனங்கள்

ஓசூர்: டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் [TVS Motor Company] மற்றும் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் [Sundaram-Clayton Limited] ஆகியவற்றின் சமூகநல செயல்பாட்டுப் பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (எஸ்எஸ்டி – Srinivasan Services Trust (SST)), கிராமப்புற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சுயஉதவி குழுக்களை உருவாக்கி, அந்த சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளுக்கான இணைப்பு வசதியை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம், கிராமப்புற பெண்களுக்கு வருவாய் ஈட்டும் திட்டங்களை உருவாக்கியுள்ளது. சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் [SST]- ன் ஆதரவுடன் ஏறக்குறைய 11,000 பெண்கள் கால்நடைகள் மூலம் தங்களது வாழ்வாதாரத்திற்கு அவசியமான வருமானத்தை சம்பாதிக்கின்றனர். சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட், இந்த மாபெரும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (The National Dairy Development Board -NDDB) தங்களது ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு முழுமையான கால்நடை வளர்ப்பு திட்டத்தை [livestock program] செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறாக பயிற்சி பெறும் பணியாளர்கள் இப்பகுதிகளிலுள்ள கிராமப்புற பெண்களுக்கு தங்களது கால்நடைகளை எவ்வாறு திறம்பட நிர்வகிப்பது என்பது குறித்து எடுத்துரைத்து வருகிறார்கள். பயிற்சி பெற்ற பணியாளர்களின் ஆதரவின் மூலம் இந்த கிராமப்புற பெண்களின் ஆண்டு வருமானம் 50 கோடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் விரிவாக்க முயற்சியாக, சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் [SST] திருப்பதியில் உள்ள உலகின் மிகப்பெரிய பெண்களுக்கு சொந்தமான பால் உற்பத்தி நிறுவனமான [the world’s largest women-owned milk producing company] ஸ்ரீஜா மகிளா மில்க் ப்ரொடியூஸர் கம்பெனி லிமிடெட் (Shreeja Mahila Milk Producer Company Limited (SMMPCL)) உடனான கூட்டு செயல்பாடு ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த கூட்டு செயல்பாட்டின் முதன்மையான நோக்கம், பால் பண்ணையாளர்களின் நல்வாழ்வு மற்றும் பலன்களை உறுதி செய்யும் வகையில் நியாயமான மற்றும் வெளிப்படையான பால் கொள்முதல் முறையை செயல்படுத்துவதுடன், அவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட சந்தைகளில் வர்த்தகத்தில் ஈடுப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாகும். 01 செப்டம்பர் 2023 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஓசூர் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 30 தொலைதூர கிராமங்களின் பொருளாதார சூழலில் நேர்மறையான புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக, 30 கிராமங்களில் இருக்கும் 300 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் 30 பால் சேகரிப்பு மையங்கள் அமைக்கும் விதமாக திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இப்பகுதியில் உள்ள சுமார் 1,000 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போதைய நிலவரப்படி, 26 பால் சேகரிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளன, இந்த பால் சேகரிப்பு மையங்களினால் 279 பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். இங்கு விற்கப்படும் விலையானது, குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு லிட்டருக்கு 48 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது, இந்த விலை முன்பு லிட்டருக்கு 18-26 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் பலனாக, விவசாயிகள் இப்போது லிட்டருக்கு 25% முதல் 30% வரை கூடுதல் வருமானம் ஈட்டுகிறார்கள்.

இதனால் ஒரு விவசாயிக்கு கிடைக்கும் கூடுதல் மாத வருமானம் 3 ஆயிரம் ரூபாயாக அதிகமாகியுள்ளது. இதன் மூலம். பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 13 லட்சம் ஆக அதிகரித்து இருக்கிறது. இவற்றுடன் மேலும் பிரகாசமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள கிராமப்புற மக்களுக்கு பால் சேகரிப்பாளர்கள் [Milk Collectors] போன்ற புதிய வேலைவாய்ப்புகளை இந்த கூட்டு செயல்பாடு உருவாக்கியுள்ளதன் மூலம் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் [SST] மற்றும் ஸ்ரீஜா மகிளா மில்க் ப்ரொடியூஸர் கம்பெனி லிமிடெட் (Shreeja Mahila Milk Producer Company Limited (SMMPCL)) -க்கு இடையிலான இந்த கூட்டு செயல்பாட்டின் மூலம் பால் மற்றும் கால்நடை தீவனத்தின் தரத்தையும் மேம்படுத்துவதை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது விவசாயிகளின் வருவாயை கணிசமான அளவில் அதிகரிக்க உதவுகிறது. இனி மேற்கொள்ளப்படவிருக்கும் அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் இப்பகுதியிலுள்ள கிராமப்புற மக்களுக்கு நீண்டகால நன்மைகள் கிடைப்பதையும், வாழ்வாதாரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்தபடியே அதிகரிக்க செய்வதையும் உறுதிசெய்யப்படும். மேலும், இச்சமூகத்தில் உள்ள மக்களிடையே தரத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்படும்.

சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST) பற்றி: டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு பிரிவான சீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் (SST) 1990-களின் மத்தியில் கிராமங்களில் பணியைத் தொடங்கியது. மக்களுக்கான உதவிகளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கி, அதன் அனைத்து திட்டங்களிலும் சமூகப் பங்கேற்பை மையமாகக் கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறது.

இன்று, தமிழ்நாட்டில் 2,000 கிராமங்களுடன் நாட்டில் மொத்தம் 2,500 கிராமங்களில் எஸ்எஸ்டி பணிகளை மேற்கொள்கிறது. இது கிராம மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த, முழுமையான மற்றும் பங்கேற்பு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. இவற்றை முழுவீச்சுடன் செயல்படுத்த சமூகம் மற்றும் அரசுடன் மிகவும் நெருக்கமாக செயல்படுகிறது.

மொத்த சமூக ஈடுபாட்டின் மூலம் கிராமங்களில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதே எஸ்ஸ்டி-யின் நோக்கம் ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேம்பாட்டின் மூலம் சமுதாயத்தை வளர்ச்சி அடையச் செய்தல், தண்ணீரைப் பாதுகாத்தல், முழுமையான சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவது போன்றவற்றின் மூலம் அரசு உள்கட்டமைப்பைப் புதுப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் இது முக்கிய கவனம் செலுத்துகிறது.

குறுந்தொழில்களை அமைக்க மக்களுக்கு உதவுவதன் மூலமும், விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலமான வருவாயை மேம்படுத்த உதவுவதன் மூலமும் சமூக- பொருளாதார வளர்ச்சியை நோக்கி எஸ்எஸ்டி செயல்படுகிறது. திட்டமிடுவது முதல் செயல்படுத்துவது வரை பங்கேற்பு அணுகுமுறையை உறுதி செய்வதன் மூலம் சமூகத்துக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதை நோக்கிய நடைமுறைகளைக் கொண்டு எஸ்எஸ்டி செயல்படுகிறது.

உறுதியுடன் கூடிய நெருக்கமான உறவு மற்றும் சமூகத்தின் மத்தியில் உரிமை உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வலுவான சமூகத்தை உருவாக்குவதே எஸ்எஸ்டி-யின் நீண்ட கால இலக்காகும். மக்களிடையே சமூக நல மாற்றத்திற்கு வழிவகுத்து, அதன் மூலம் கிராமங்களின் நிலையான வளர்ச்சியை எஸ்எஸ்டி ஊக்குவிக்கிறது.

மேலும் தகவலுக்கு இந்த மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்:
Prasant Ramakrishnan – prasant.ramakrishnan@tvsmotor.com

The post கிராமப்புற செழிப்பை மேம்படுத்தும் மாபெரும் முயற்சியில் எஸ்எஸ்டி மற்றும் எஸ்எம்எம்பிசிஎல் நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Tags : SST ,SMMBCL ,TVS Motor Company ,Sundaram-Clayton Limited ,SMMPCL ,Dinakaran ,
× RELATED உலகப் பார்வை தினத்தில் புதிய மைல்கல்:...