×

சென்னை கோயம்பேடு அடுத்த கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது!!

சென்னை: சென்னை கோயம்பேடு அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். சோதனையில் டைடால் என்ற போதை மாத்திரையை ரூ.300க்கு விற்பனை செய்து வந்த 5 பேரை போலீஸ் மடக்கிப் பிடித்தது. ஈஸ்வரன், சஞ்சய், கவுதம், அஜய், மதன்ராஜ் ஆகியோரை கைது செய்து 60 போதை மாத்திரைகளை போலீஸ் பறிமுதல் செய்தது.

 

The post சென்னை கோயம்பேடு அடுத்த கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu, Chennai ,Chennai ,Mettukuppam ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...