×

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது தஞ்சைப் பெரிய கோயில் என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும், தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார். இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் வேட்டி ,சட்டை ,பேண்ட் அணிந்தும் , பெண்கள் புடவை ,தாவணி, துப்பட்டா உடன் கூடிய சுடிதார் அணிந்து வரும்படி கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tanjore ,Tanjore Grand Temple ,Tanjai Peruvudayar Temple ,Tanjai Big Temple ,
× RELATED லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை