×

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு 4,000 கன அடியாக குறைப்பு.!

செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைந்துள்ளது. தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவ மழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் நீர் பிடிப்பு பகுதிகளிலிருந்து சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கெனவே விநாடிக்கு 25 கன அடி என வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீரின் அளவு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,210 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 22.35 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 514 கன அடியாகவும் இருந்தது. ஆகவே,காலை 9 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இச்சூழலில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து அதிகரித்து வந்த நீர் வரத்து நேற்று மாலை விநாடிக்கு 1,100 கன அடியாக இருந்தது.

ஆகவே, நேற்று மாலை 4.30 மணியளவில், செம்பரம்பாக்கம் ஏரிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அளவு வினாடிக்கு 6,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவையின் கீழ் உள்ள 1,146 ஏரிகளில் 85 ஏரிகள் முழுமையாகவும், 91 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 305 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலாகவும் நிரம்பியுள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் திறந்து விடப்படும் உபரிநீர் அளவு 4,000 கன அடியாக குறைப்பு.! appeared first on Dinakaran.

Tags : Chembarambakkam lake ,Adyar ,Chengalpattu ,Sembarambakkam lake ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை...