×

மின் வயர்கள் திருட்டு

போடி, நவ. 30: போடி குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். அந்நிறுவனம் சார்பில் போடி சோலை சொக்கலிங்கம் நகரில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை பார்வையிடுவதற்கு பாலமுருகன் நேற்று முன்தினம் அங்கு சென்றார். அந்த கட்டிடத்திலிருந்து அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், மின்வயர்களை திருடிவிட்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை கையும், களவுமாக பிடித்த பாலமுருகன், போடி நகர் காவல் நிலையத்தில் வாலிபரை ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், அவர் போடியில் உள்ள மதுரை வீரன் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் தங்கபாண்டி (23) என தெரிய வந்தது. இது தொடர்பாக தங்கப்பாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மின் வயர்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Balamurugan ,Pilliyar Koil Street ,Bodi Kuppinayakkanpatti ,Dinakaran ,
× RELATED போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை