×

அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு பருத்தி வரத்து குறைவால் விலை சரிவு

அவிநாசி, நவ.30: அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு அவிநாசி, புளியம்பட்டி, குன்னத்தூர், ஆத்தூர், மேட்டூர், கோபி, நம்பியூர், மலையப்பாளையம், சத்தியமங்கலம், கொள்ளேகால், அந்தியூர், அத்தாணி, ஆகிய பகுதிகளிலிருந்து 102 பருத்தி விவசாயி மொத்தம் 94.13 குவிண்டால் எடையுள்ள 302 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். இது கடந்த வாரத்தை விட மிகவும் குறைவுதான்.

இதில், ஆர்சிஎச் பிடி ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7,436 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 11 பருத்தி வியாபாரிகளும் பங்கேற்றனர்.

அதேபோல அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தேங்காய் ஏலம் நேற்று துவங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட தேங்காய் விவசாயிகள் 759 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கிலோ ஒன்றுக்கு ரூ.26 முதல் ரூ.27 வரை டெண்டர் மூலம் விற்பனை நடைபெற்றது.

The post அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு பருத்தி வரத்து குறைவால் விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Avinasi Co-operative Sales Society ,Avinasi ,Avinasi Agricultural Producers Cooperative Sales Association ,Puliyampatti ,Dinakaran ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில்...