×

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

திருப்பூர், நவ. 30: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, கூல் லீப் மற்றும் நிக்கோட்டின் கலந்த புகையிலை, ஹான்ஸ் பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் உணவு பாதுகாப்பு துறை திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் கலந்தாய்வு மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது: கூட்டத்தில் காவல்துறை உயர் அலுவலர்கள் உட்பட மற்ற அலுவலர்கள் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு ஹான்ஸ், குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை கடுமையாக இருக்கும்.
முக்கியமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் பான் மசாலா, குட்கா ஹான்ஸ், போன்ற நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து முற்றிலும் ஒழிப்பதற்கு தொடர் நடவடிக்கை மாவட்ட முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பவர்களை திடீர் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் காவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் நடவடிக்கையாக மொத்தம் 74 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடைகள் மூடப்பட்டுள்ளது. அபராத தொகையாக 4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு 185 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இந்நடவடிக்கையை தீவிர படுத்தும் பொருட்டு, மேற்படி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் சேமித்து வைத்திருப்பது கண்டறியப்பட்டால் கடைகள் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்று ரத்து செய்யப்படும். மேலும் உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் ட்ரேடு லைசென்ஸ் ரத்து செய்யப்படும். கடையும் உடனடியாக மூடப்படும். மேலும் காவல்துறையால் குண்டர் சட்டத்தின் படியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதை உடனடியாக 9444042322 என்ற தொலைபேசி எண்ணிலும், TN food safety consumer.app என்ற செயலி மூலமாக புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kristaraj ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...