×

திருவாடானையில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாடானை, நவ.30: திருவாடானை மேலதெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாடானை மேல தெருவில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 27ம் தேதி மங்கல இசையுடன் அனுஜை, விக்னேஸ்வரர் பூஜை மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையுடன் துவங்கியது. 28ம் தேதி இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று நான்காம் கால யாக பூஜையுடன் காலை10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை யாகத்தில் இருந்து சிவாச்சாரியார் ஆதிரத்தினம் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வந்து கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனையடுத்து மூலவருக்கு கலசத்தில் இருந்த புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவை காண சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மேலத்தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post திருவாடானையில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Muthumariamman Temple Kumbabhishekam ,Thiruvadanai ,Muthumariamman ,Meleteru, Thiruvadanai ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...