×

தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கூடலூர், நவ.30: தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பேரூராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த 25, 26-ம் தேதிகளில் துறையூரில் நடைபெற்ற மாநில அளவிலான 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை எம்டிஎஸ் மெட்ரிக் மேல்நிலை தனியார் பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்தனர். முடிவில் தேசிய அளவிலான மாநாட்டில் கலந்து கொள்வதற்கு தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்துறை பகுதி எம்டிஎஸ் மெட்ரிக் மேல்நிலை தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

டெங்கு ஒழிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நேற்று தேவர் சோலை பேரூராட்சி வளாகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவர் முகமது சினான், மாணவி பத்ரு நிஷா ஆகியோருக்கு தேவர் சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத்தலைவர் யூனஸ் பாபு, செயல் அலுவலர் மோசஸ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். இதில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தேர்வு பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : National Science Conference ,Kudalur ,Dinakaran ,
× RELATED தெப்பக்காடு பாலப்பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை