×

வாலிபர் கைது, வேன் பறிமுதல் கடவூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி உயிரிழப்பு

தோகைமலை, நவ. 30: கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல்சரகம் செம்பியநத்தம் ஊராட்சி பூசாரிபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், இவரது மகன் பழனியப்பன் (50). விவசாயி. கால்நடைகள் வளர்க்கிறார். பழனியப்பன், வீட்டின் அருகே இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை பழனியப்பன், தனது விவசாய தோட்டத்தில் பசு மாட்டை குளிப்பாட்டிக்கொண்டிருந்தார். அப்போது பசுமாடு தண்ணீருக்கு பயந்துகொண்டு ஓடியது.

இதனால் பசுமாட்டின் கயிற்றை பழனியப்பன், கையில் பிடித்துள்ளார். ஆனால் பசுமாடு மேலும் பயந்து கொண்டு அருகில் இருந்த கிணற்றில் விழுவதுபோல் சென்றுள்ளது. பசுமாடு கிணற்றில் தவறி விழுந்துவிடக் கூடாது என்று பழனியப்பன் கயிற்றை இழுத்து பசுமாட்டை காப்பாற்ற பிடித்து இழுத்துள்ளார். ஆனாலும் நிலைதடுமாறிய பசுமாடு 90 அடி ஆளமுள்ள கிணற்றில் விழுந்து விட்டது. இதேபோல் பசுமாட்டின் கயிற்றைவிடாமல் பிடித்தபடி பழனியப்பனும் கிணற்றிற்குள் தவறி விழுந்துள்ளார்.

தகவலறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக பாலவிடுதி எஸ்ஐ தர்மலிங்கம் குஜியம்பாறை தீ அணைப்பு வீரர்களை வரவழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நீண்டநேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் பழனியப்பன் உடலையும், பசுமாட்டையும் மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். போலீசார், பழனியப்பன் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்த பழனியப்பனுக்கு 2 மகன்களும், ஒரு மகள் உள்ளனர்.

The post வாலிபர் கைது, வேன் பறிமுதல் கடவூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Tokaimalai ,Mariyappan ,Pusaripatti ,Balavidhu Kavalcharakam Sempiyanattam Panchayat ,Kadavur, Karur district ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்