×

புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு

புதுக்கோட்டை, நவ.30: புதுக்கோட்டை வருவாய் மாவட்ட கல்வித்துறையில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களில் 53 ஆய்வக உதவியாளர்கள் விருப்ப மாறுதல் கேட்டு விண்ணப்பித்தனர். இதில் 21 ஆய்வக உதவியாளர்கள் விருப்ப மாறுதல் மூலம் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து விருப்பமாறுதல் பெற்ற 21 ஆய்வக உதவியாளர்களுக்கும் விருப்ப மாறுதல் ஆணையினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா வழங்கினார்.நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குரு.மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் சங்கரநாராயணன், கார்த்திக்கேயன், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன், உதவியாளர்கள் ராஜ்மோகன், முகமதுகனி, இளநிலை உதவியாளர் பிரசன்னகார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Pudukottai Government Schools ,Pudukottai ,Pudukottai Primary Education Office ,Dinakaran ,
× RELATED புதுகை மாவட்ட அளவில் நடந்த...