×

கொடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் அறிக்கை தாக்கல்

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஊட்டி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகள் கடந்த ஜூலை மாதம் கோவையில் உள்ள தொழில் நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக அவற்றை ஆய்வு செய்த நிலையில் அதில் உள்ள தகவல்கள் மற்றும் தகவல் பரிமாற்ற விபரங்களை அறிக்கையாக தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையையும், ஆய்வு செய்யப்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் பென் டிரைவ்கள் வைக்கப்பட்டு முத்திரையிடப்பட்ட கவரையும் நேற்று ஆய்வக அதிகாரிகள் ஊட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

The post கொடநாடு வழக்கு ஊட்டி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Koda Nadu ,Ooty Court ,Ooty ,Kodanadu ,
× RELATED கொலை, கொள்ளை சம்பவம் நடந்த கொடநாடு...