×

₹4800 கோடி டெண்டரில் ஊழலா? எடப்பாடி பேட்டி

இடைப்பாடி: சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டி: பருவமழை காரணமாக, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

காய்ச்சல் முகாம்களை அதிகளவில் நடத்த வேண்டும். இந்த முறை மக்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். நெடுஞ்சாலை துறையில் மொத்த டெண்டர் ₹4800 கோடி தான். இதில் அனைத்துமே எப்படி ஊழல் நடக்க முடியும்?. நடக்காத டெண்டருக்கு எப்படி ஊழல் நடக்கும் என உயர்நீதிமன்ற நீதியரசரே கூறியுள்ளார்.

தவறு நடந்தால் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஊழல் செய்யவில்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post ₹4800 கோடி டெண்டரில் ஊழலா? எடப்பாடி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Ethappadi ,AIADMK ,general secretary ,Edappadi Palaniswami ,Salem ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு