×

நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி

ஆலந்தூர், நவ. 30: .கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (32), கடந்த 3 வருடமாக நங்கநல்லூரில் உள்ள மின்பகிர்மான வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை நங்கநல்லூர் இந்து காலனி 100 அடி சாலையில் மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்வதற்காக ஜெகதீஸ்வரன் சென்றுள்ளார். இதற்காக மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்கம்பத்தில் ஏறியபோது ரிடர்ன் வந்த மின்சாரம் பாய்ந்ததில் மின்கம்பியில் தொங்கியபடியே ஜெகதீஸ்வரன் பரிதாபமாக உயரிழந்தார். தகவல் அறிந்ததும் பழவந்தாங்கல் போலீசார் மற்றும் மின்வாரியம், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மின்சார கம்பத்தில் தொங்கியநிலையில் இருந்த ஜெகதீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பத்தூர்: பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத்குமார் (57), திமுகவில் பல பொறுப்புகளை வகித்தவர். இவரது மனைவி அம்பத்தூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பத்குமார் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை 6 மணிக்கு கொரட்டூர் ஜம்புகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோயிலை சுற்றி நடைபயணம் சென்றுள்ளார். அப்போது திடீரென மழை பெய்ததால் அருகில் உள்ள கம்பெனி வாசலில் ஒதுங்கியுள்ளார். அந்த கம்பெனியில் இருந்த வெல்டிங் மெஷினில் இருந்து மின்சார கசிவு ஏற்பட்டு சம்பத்குமார் தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சம்பத்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிந்து, வெல்டிங் கம்பெனி உரிமையாளர் ஜானகிராமன் (51) மீது வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

The post நங்கநல்லூர், கொரட்டூரில் மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன், வக்கீல் பலி appeared first on Dinakaran.

Tags : Gangman ,Nanganallur, Korattur ,Alandur ,.Jegadeeswaran ,Kovilampakkam ,Nanganallur ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...