×

குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய புத்தக கண்காட்சி

குளச்சல், நவ.30 : குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர் ஆசிரியர் கழகம் , நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் மற்றும் குமரி மாவட்ட திருவருட் பேரவை ஆகியவை சார்பில் தேசிய புத்தக கண்காட்சி தொடங்கியது. தமிழக சட்டசபை முன்னாள் செயலாளர் ஜமாலுதீன் துவக்கி வைத்தார். திருவருட் பேரவை மகளிர் அணி அமைப்பாளர் கீதா முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ஜாண்சன், ரஹீம், பனிக்குருசு, செல்வகுமாரி, தி.மு.க நகர செயலாளர் நாகூர்கான், பள்ளி தலைமையாசிரியர் பிஷி ஜாஸ்மின், குளச்சல் தபால் நிலைய அலுவலர் ஜஸ்டின் ஜோஸ்,இந்திய அரசின் ராணுவ தளவாட தொழிற்சாலை மருத்துவமனைகளின் ஓய்வு பெற்ற இயக்குனர் டாக்டர் கோ.ராஜேஸ் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தக கண்காட்சி வரும் டிசம்பர் 7ம் தேதி வரை நடக்கிறது.

The post குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் தேசிய புத்தக கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : National Book Fair ,Kulachal Government Middle School ,Kulachal ,School Management Committee Parent Teacher Association ,New Century Book ,Dinakaran ,
× RELATED வெள்ளிச்சந்தை அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது