×

இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் கட்டி தருகிறது இந்தியா: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

கொழும்பு: இலங்கையில் இந்திய வீட்டு திட்டம் 4வது கட்டத்தின் கீழ் தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகள் கட்டும் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை உடனான மக்கள் நல மேம்பாட்டு ஒத்துழைப்பின் கீழ் இந்தியா அங்கு வீடுகளை கட்டி தருகிறது. இதன் முதல் 2 கட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள், 3வது கட்டத்தில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் 4,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

இதன் 4வது கட்டமாக தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகளை கட்டி கொடுக்கும் 2 ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. இந்த வீடுகள் தேசிய வீட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அரசு பொறியியல் கழகம் (எஸ்இசி) ஆகியவற்றின் மூலம் கட்டி கொடுக்கப்பட உள்ளது.

இந்த வீடுகள் இலங்கையின் 6 மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களில் கட்டித் தரப்பட உள்ளது. இலங்கை அரசு தரப்பில், மேம்பாட்டு ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் தலைவருமான எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் மற்றும் எஸ்இசி தலைவர் ரத்ன கலுபஹானா ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

The post இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மேலும் 10,000 வீடுகள் கட்டி தருகிறது இந்தியா: 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : India ,Lanka ,Colombo ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய...