×

8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது

டோக்கியோ: அமெரிக்க ராணுவ விமானம் தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜப்பான் கடற்படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஓஸ்பிரே விமானமானது ஹெலிகாப்டராகவும், டர்போ விமானமாகவும் செயல்படக்கூடியது. இந்நிலையில் 8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம் ஜப்பானின் தெற்கு கடல்பகுதியில் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானது.

கியூஷூவில் உள்ள யாகூஷிமா தீவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக அங்கிருந்த மீன்பிடி படகில் இருந்து ஜப்பான் கடலோர காவல்படைக்கு அவசர அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து ஜப்பான் கடலோர காவல் படையினர் மீட்பு பணிகளுக்காக விரைந்தனர். விமானத்தில் சென்ற 8 பேரின் நிலை என்ன என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் தெரியவில்லை. மேலும் ஓஸ்ப்ரே விமானம் எந்த அமெரிக்க தளத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. இவாகுனியில் இருந்து ஓகினாவா நோக்கி சென்றதாக கூறப்படுகின்றது.

The post 8 பேருடன் சென்ற அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் கடலில் விழுந்தது appeared first on Dinakaran.

Tags : US ,Sea of Japan ,Tokyo ,Sea of South Japan ,Japanese Navy ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்