×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர் மழையால் சென்னை புறநகர் வியாபாரிகளின் வருகை குறைந்ததால் திடீரென அனைத்து பூக்களின் விலையிலும் சரிவு ஏற்பட்டது. வியாபாரிகள் குறைந்த விலையில் பூக்களை விற்பனை செய்தனர்.ஒரு கிலோ மல்லி 600க்கும், கனகாம்பரம் 500க்கும், ஐஸ் மல்லி 400க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி 300க்கும், அரளி பூ 150க்கும், சாமந்தி 100க்கும், சம்பங்கி 60க்கும், பன்னீர் ரோஸ் 40க்கும், சாக்லேட் ரோஸ் 60க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும் போது, ‘‘தொடர்மழை பெய்ததால் சென்னை புறநகர் வியாபாரிகளின் வருகை குறைந்தது. இதனால், அனைத்து பூக்களின் விலையிலும் சரிவு ஏற்பட்டது’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Karthikai Deepam ,market ,Mugurtha ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள்...