×

மாதாந்திர அட்டையில் டிலைட் பால் 500 மில்லியும் 200 மில்லி பால் ரூ.10க்கும் நாளை முதல் விற்பனை: ஆவின் நிர்வாகம் தகவல்

சென்னை: ஆவின் டிலைட் 500 மில்லி பால் மாதாந்திர பால் அட்டை மூலமும், 200 மில்லி பாக்கெட்களில் ரூ.10க்கு நாளை முதல் அனைத்து சில்லரை விற்பனை கடைகளிலும் விற்கப்படும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டரும், நாளொன்றுக்கு சுமார் ரூ.1 கோடி பால் உபபொருட்களை சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமும் பொது மக்களுக்கு தங்குதடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜெந்தா நிறம்), சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) மற்றும் நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலும் மற்றும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே மாதம் சென்னையில் விட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500மில்லி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் 500 மில்லி டிலைட் பால் ரூ.21 விலையில் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் டிசம்பர் மாதம் முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும். மேலும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப 200 மில்லி டிலைட் பால் ரூ.10 விலையில் நாளை முதல் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மாதாந்திர அட்டையில் டிலைட் பால் 500 மில்லியும் 200 மில்லி பால் ரூ.10க்கும் நாளை முதல் விற்பனை: ஆவின் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Aavin ,Chennai ,Aavin Delight ,Delight ,Dinakaran ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...