×

இந்தியா மிகச்சிறந்த பொறியாளர்களைக் கொண்டுள்ளது: ஆஸ்திரேலிய சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்டு டிக்ஸ் புகழாரம்

உத்தராகண்ட்: இந்தியா மிகச்சிறந்த பொறியாளர்களைக் கொண்டுள்ளதாக பாராட்டியுள்ள ஆஸ்திரேலிய சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்டு டிக்ஸ் இந்திய பொறியியல் வல்லுனர்களுடன் மீட்பு பணியில் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவத்தை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 12ம் தேதி சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிய நிலையில் மீட்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளின் நிபுணர்கள் கைகோர்த்தனர். அவர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்டு டிக்ஸ் பொறியியல் வல்லுனர்களுடன் இணைந்து மீட்பு பணிகளுக்கு உதவினார்.

தற்போது 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்னால்டு டிக்ஸ்; இந்தியாவில் மிக சிறந்த பொறியாளர்களை காண முடிந்ததாக புகழாரம் சூட்டினார். தெளிவான மனநிலை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் சாத்தியமற்ற செயல்களும் சாத்தியமாகும் என்பதற்கு உத்தராகண்ட் மீட்பு உதாரணம் என்று அர்னால்டு டிக்ஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக சுரங்க தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பாராட்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியா மிகச்சிறந்த பொறியாளர்களைக் கொண்டுள்ளது: ஆஸ்திரேலிய சுரங்க மீட்பு நிபுணர் அர்னால்டு டிக்ஸ் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : India ,Arnold Diggs ,Uttarakhand ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...