×

‘கை விலங்கிட்டு’ அழைத்து வந்ததாக சர்ச்சை சிறுமியிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை

கோத்தகிரி : கோத்தகிரியில் கை விலங்கிட்டு 15 சிறுமியை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்ததாக சர்ச்சை எழுந்தது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் 15 வயது சிறுமிக்கு கை விலங்கிட்டு காவல்துறை விசாரணைக்கு அழைத்து வந்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க கனுங்கோ நேற்று நேரில் விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோத்தகிரியில் கடந்த 7ம் தேதி 15 வயது சிறுமிக்கு காவல்துறை கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தெரிய வந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரில் பேசினேன். இது தொடர்பாக விரிவான அறிக்கையை ஆணையத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளேன். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரில் விசாரணை நடத்தினேன்’’ என தெரிவித்தார். சிறுமியின் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘‘சிறுமியிடம் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை நடத்தினார். 15 வயது சிறுமிக்கு கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைய தலைவர் கூறினார்’’ என தெரிவித்தார்.

முன்னதாக கோத்தகிரியில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க கனுங்கோ தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் குறித்த சிறப்பு அமர்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 202 மனுக்கள் பெறப்பட்டது.

The post ‘கை விலங்கிட்டு’ அழைத்து வந்ததாக சர்ச்சை சிறுமியிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : National Commission for Protection of Child Rights ,Kothagiri ,National Child Rights Protection Authority ,NCRC ,
× RELATED கோத்தகிரி அருகே 2 நாட்கள்...