×

புதுக்கோட்டை சின்னப்பாநகர் அருகே வீட்டில் புகுந்த 5 அடி நீள பாம்பு

புதுக்கோட்டை, நவ.29: புதுக்கோட்டை சின்னப்பா நகர் அருகே உள்ள அழகர் நகரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வீட்டில் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள சாரைப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை தீயணைப்பு துறை பிடித்து காட்டில் விட்டனர்.

புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட சின்னப்பா நகர் அருகே உள்ள அழகர் நகரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அலுவலர் வின்சென்ட் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்குள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகே பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வின்சென்ட் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் வின்சென்ட் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தேடும் போது பாம்பு கிடைக்காத நிலையில் உடனடியாக வின்சென்ட் அவரது வீட்டில் உள்ள கழிவு நீர் செல்லும் துவாரத்திற்குள் பாம்பு சென்றுள்ளது.

அதனால் அந்த துவாரத்தை உடைத்து பாருங்கள் என்று தெரிவித்ததை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் கழிவுநீர் செல்லக்கூடிய துவாரத்தை உடைத்து பார்த்த போது அதில் ஐந்தரை அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு இருந்துள்ளது. அதனை பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியத்தை தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் ஐந்தரை அடி நீளம் உள்ள பாம்பை அச்சத்துடன் பார்த்து திகைத்து நின்றனர். பின்னர் வின்சென்ட் வீட்டில் பிடித்த ஐந்தரை அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் வனத்துறையினர் மூலம் காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

The post புதுக்கோட்டை சின்னப்பாநகர் அருகே வீட்டில் புகுந்த 5 அடி நீள பாம்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkottai Chinnapanagar ,Pudukkottai ,Transport Department ,Ahagar Nagar ,Chinnappa Nagar ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...