×

முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்

மயிலாடுதுறை,நவ.29: வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் மகாபாரதி அறிவுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி விடுத்துள்ள செய்தி குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொது மக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. வைரஸ் காய்ச்சலானது காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.

வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடித்தல் போன்றவைகளை கடைபிடித்தல் வேண்டும். டெங்கு வைரஸ் காய்ச்சலை தடுக்க வீட்டில் தேவையில்லாத பொருள்களில் மழைநீர் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் காய்ச்சில், சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருந்து கடைகள் மூலம் சுய சிகிச்சை செய்யாமல் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் சிகிச்சை மையம் மூலம் உரிய சிகிச்சை தரப்படுகிறது.

தேவையான சிகிச்சை மருந்து மற்றும் மாத்திரைகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் நோயாளிகள் உள்நோயளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தரப்படுகிறது. நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கழற்சி முறையில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. பள்ளி குழத்தைகள், பள்ளி சிறார், மருத்துவ முகாம் மூலம் பள்ளிகளுக்கு சென்று பரிசோதனை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் பள்ளி மாணவ மாணவியருக்கு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் தகவல் தரஅறிவுறுத்தப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐந்து நடமாடும் மருத்துவ முகாம்கள் மற்றும் 10 பள்ளி சிறார் மருத்துவ முகாம்கள் மூலமாகவும் பரிசோதனை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சனிக்கிழமை தோறும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைப்பெற்று வருகின்றன பொது மக்கள் இது குறித்து எந்தவித அச்சம் அடையாமல் காய்ச்சல் வந்தால் உரியசிகிச்கை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Collector ,Mahabharathi ,Mayiladuthurai ,
× RELATED மயிலாடுதுறையில் 226 பள்ளி வாகனங்கள் தணிக்கை: கலெக்டர் தலைமையில் நடந்தது