×

இளை­ஞர் அணி மாநாட்டு வெற்­றிக்­கு உறு­தியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பிறந்த நாள் வாழ்த்­து­களை, நான் மென்­மே­லும் உற்­சா­கத்­து­டன் உழைப்­ப­தற்­கான எரி­பொ­ரு­ளா­கவே எடுத்­துக்­கொள்­கி­றேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அமைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
பிறந்த நாளில், முத­ல்வர்-திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்­து­தான் முதல் வாழ்த்து. நேரில் சென்­ற­தும், ‘இளை­ஞர் அணி மாநாடு குறித்து, நான் எழு­திய கடி­தத்­தைப் படித்­தாயா?’ என்­ற­படி வாழ்த்­தி­னார்­. சமூக நீதிக் காவ­லர் வி.பி.சிங்கின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதில் மிக மகிழ்ச்சி. வி.பி.சிங் என் மன­துக்கு நெருக்­க­மான தலை­வர்­க­ளில் ஒரு­வர். அதைத்­தொ­டர்ந்து திமுக நிர்­வா­கி­கள் இளை­ஞர் அணி சகோ­த­ரர்­க­ளு­டன் மதிய உணவு உண்டு மகிழ்ந்­தேன். திமுக தலை­வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செய­லா­ளர் துரைமுருகன், முதன்­மைச் செய­லா­ளர் கே.என்.நேரு உள்­ளிட்ட தலை­மைக் கழக நிர்­வா­கி­கள், அமைச்­சர்­கள், மாவட்ட செய­லா­ளர்­கள் உள்­ளிட்ட திமுக நிர்­வா­கி­கள், கலை­ஞ­ரின் உயி­ரி­னும் மேலான அன்பு உடன்­பி­றப்­பு­கள், சேப்­பாக்­கம்-­தி­ரு­வல்­லிக்­கேணி தொகுதி மக்­கள், இளை­ஞர் அணி­யைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள், அரசு அதி­கா­ரி­கள், காவல் துறை­யி­னர், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள், திரை­யு­ல­கி­ன­ருக்­கு நன்றி.

பிறந்த நாள் வாழ்த்­து­களை, நான் மென்­மே­லும் உற்­சா­கத்­து­டன் உழைப்­ப­தற்­கான எரி­பொ­ரு­ளா­கவே எடுத்­துக்­கொள்­கி­றேன். மாநில உரிமை மீட்பு முழக்­கத்­து­டன் சேலத்­தில், வரும் டிசம்­பர் 17ம் தேதி நாம் முன்­னெ­டுக்­கும் திமுக இளை­ஞர் அணி­யின் 2வது மாநில மாநாட்­டின் வெற்­றிக்­காக உழைக்க உறு­தி­யேற்­போம். வாழ்த்­திய அனை­வ­ருக்­கும் என் அன்­பும் நன்­றி­யும்.

The post இளை­ஞர் அணி மாநாட்டு வெற்­றிக்­கு உறு­தியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : youth team ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED சிவகங்கை திமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம்