×

வேதாரண்யத்தில் ஜவுளி பூங்காவுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு: அதிமுக கண்டனம்

வேதாரண்யம்: அதிமுக முன்னாள் அமைச்சரும், நாகை மாவட்ட செயலாளருமான ஓ.எஸ்.மணியன் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழகம் தான் இந்தியாவிலேயே ஜவுளி தொழிலில் முதன்மை மாநிலமாக உள்ளது. இந்தியாவில் 90 சதவீத உற்பத்தியாளர்கள் சிறு குறு நடுத்தர தொழில் சார்ந்தவர்கள். ஆனால் ஒன்றிய அரசு, 10 சதவீதம் உற்பத்தி செய்யும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஜவுளி பூங்கா தூங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காதது கண்டிக்கதக்கது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒன்றிய அரசு அனுமதி மறுப்பது நியாயமனதாக இல்லை. ஆயத்த ஆடை பூங்கா அமைக்க ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டுகிறேன்’ என்று கூறி உள்ளார்.

The post வேதாரண்யத்தில் ஜவுளி பூங்காவுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு: அதிமுக கண்டனம் appeared first on Dinakaran.

Tags : EU Government ,Former Minister ,Nagai District ,O. S. ,Manian ,Tamil Nadu ,India ,Vedaranya ,
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...