×

மதுரை நரசிங்கம்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை, நவ. 29: மதுரை மண்டல கால்நடை துறை இணை இயக்குநர் நடராஜகுமார், மாவட்ட கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா, மதுரை கோட்ட உதவி இயக்குநர் பழனிவேலு தலைமை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் கருணாகரன், கவுதம், தாரணி, ஜான்சுரேஸ்தாசன் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை ஆய்வாளர்கள் பாத்திமா, சசிகலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சைனுலாபுதீன், பிரேமலதா, மச்சப்பாண்டி, லதா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை பணிகளை மேற்கொண்டனர்.

முகாமில் 150 கால்நடைகளுக்கு காணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. 250 மாடுகள், 300 ஆடுகள், 225 கோழிகள், 23 நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணி, சினை பரிசோதனை ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது. 10 சிறந்த வளர்ப்பு கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் ஐசிஏஆர் விவசாய ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி கிருஷ்ணமூர்த்தி, சென்னை கால்நடை பராமரிப்பு துறை தலைமை அலுவலக மருத்துவர் சுந்தரேசன், சென்னை மருத்துவர்கள் மணிகண்டன், கருணாநிதி மற்றும் கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டனர்.

The post மதுரை நரசிங்கம்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Veterinary Specialty Medical Camp ,Madurai Narasinghampatti ,Madurai ,Madurai Zonal Veterinary Department ,Joint Director ,Natarajakumar ,District Veterinary Disease Investigation Division ,Madurai Special Veterinary Medical Camp ,Narasinghampatti ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை