×

காதலிக்கு வேறு நபருடன் திருமணம் வாலிபர் தற்கொலை

திங்கள்சந்தை: குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(31). சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இவர் பக்கத்து ஊரை சேர்ந்த பட்டதாரி இளம் பெண் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். இருவரும் பல்வேறு இடங்களுக்கும் ஜோடியாக சுற்றி வந்துள்ளனர். இதனிடையே இளம் பெண்ணுக்கும் மார்த்தாண்டத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது.

இதையறிந்து சதீஷ்குமார் ஊருக்கு வந்துள்ளார். மனமுடைந்துகாணப்பட்ட சதீஷ்குமார் நேற்று முன்தினம் மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.. இந்நிலையில், ‘தனது சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று சதீஷ்குமார் உருக்கமாக எழுதிய கடிதமும் சிக்கி உள்ளது.

The post காதலிக்கு வேறு நபருடன் திருமணம் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sathish Kumar ,Khondpanthivilai ,Villukuri ,Kumari district ,Saudi Arabia ,
× RELATED ஒசூர் அருகே தளியில் நேற்று முன்தினம் நடந்த ரவுடி கொலை தொடர்பாக 4 பேர் கைது!