×

செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து

மேல்மலையனூர், நவ. 29: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் திடீரென இறங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் இருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு சாரல் மழை பெய்து கொண்டிருந்துள்ளது. அச்சமயம் பேருந்து ஓட்டுநர் வழியில் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வழுக்கி சென்றபடி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட்டனர்.

பின்னர் பள்ளத்தில் பேருந்து இறங்கி நின்ற நிலையில் பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கி பெருமூச்சு விட்டனர். மேலும் இச்சம்பவத்தால் பயணிகள் யாருக்கும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் மீட்டு மாற்று பேருந்து மூலம் அவரவர் பகுதிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான பேருந்தையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து appeared first on Dinakaran.

Tags : Senchi ,Melmalayanur ,Chenchi ,Villupuram district ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது...