×

புதுக்கிணறு கிராமத்தில் சமூக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளம், நவ. 29:தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுப்படி சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் ‘மாற்றத்தை தேடி’ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது. அதன்படி சாத்தான்குளம் எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் புதுக்கிணறு பகுதியில் ‘மாற்றத்தை தேடி’ விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதுவரை 3761 மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்கள் காவல் துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,18,626 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துகளை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post புதுக்கிணறு கிராமத்தில் சமூக விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Pudukinaru Village ,Satankulam ,Tuticorin District ,SP ,Balaji Saravanan ,Chatankulam Police Station ,
× RELATED சாத்தான்குளம் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா