×

குளச்சல் அருகே பரபரப்பு ஆக்ரமிப்பு அகற்றக்கோரி சாலை பணி தடுத்து நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம்

குளச்சல், நவ.29: குளச்சல் அருகே ஆக்ரமிப்புகளை அகற்றி விட்டு சாலை சீரமைப்பு பணிகளை நடத்தக்கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்குள்ள 8வது வார்டுக்கு உட்பட்ட செந்தரை பகுதி முதல் அங்கன்வாடி செல்லும் சாலை வரை தார் சாலையாக மாற்றியமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் அந்த சாலையோரத்தில் வீடுகளில் வசிக்கும் சிலர் மழைநீர் வடிகாலை ஆக்ரமித்து படிக்கட்டுகள் மற்றும் சப்பாத்துகளை அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக தண்ணீர் செல்வது தடைபடுகிறது. எனவே ஆக்ரமிப்புகளை முறைப்படி அகற்றிவிட்டு சாலைப்பணியை மேற்கொள்ளுங்கள் எனக்கூறி பொதுமக்கள் பலர் திரண்டு பணிகளை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்ததும் ரீத்தாபுரம் பேரூராட்சி தலைவர் எட்வின் ஜோஸ், செயல் அலுவலர் சங்கர் கணேஷ், குளச்சல் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post குளச்சல் அருகே பரபரப்பு ஆக்ரமிப்பு அகற்றக்கோரி சாலை பணி தடுத்து நிறுத்தம் பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Dinakaran ,
× RELATED வெள்ளிச்சந்தை அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது