விருதுநகர், நவ.29விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் 12 நாட்கள் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. தினசரி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சிறப்பு எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் பங்கேற்ற சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
புத்தக திருவிழா காட்சிப்படுத்தப்பட்டிருந்த வைப்பாற்றங்கரையில் வரலாற்றை எடுத்துச் சொல்லும் தொல் தமிழர்கள் வாழ்ந்த வைப்பாற்றங்கரை மேடு, வெம்பக்கோட்டை அகழாய்வு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு அகழாய்வு சான்றுகளை, வரலாற்று ஆவணங்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களால் பயன்படுத்தி வரக்கூடிய மிகவும் அரிதான இசைக்கருவிகள் பெரும்பாலான பொதுமக்களை கவர்ந்ததாக இருந்தது. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக அறிவியல் சார்ந்த முப்பரிமாண அரங்கு அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான குழந்தைகள் கண்டுகளித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த லட்சக்கணக்கான புத்தகங்களில் ரூ.66,09,084 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடந்துள்ளது. மேலும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்குவதற்கும், கிராமப்புற நூலகங்களில் வைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.40 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2வது புத்தக திருவிழாவில் ரூ.1,06,09,084 மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post இரண்டாவது புத்தக திருவிழாவில் ரூ.1.06 கோடிக்கு புத்தகம் விற்பனை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
