×

பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது: சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கருத்து

சென்னை: யானைகளை பாதுகாக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், டாஸ்மாக் மது பாட்டில்கள் டெண்டர் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், சமீபத்தில் மின்வேலியில் சிக்கி நான்கு யானைகள் மரணமடைந்துள்ளன.

விவசாயத்தை அளிப்பதாக விவசாயிகள் போராட்டம் நடத்தினாளும் யானைகளை பாதுகாக்க உரிய வழிமுறைகளை கையாள வேண்டும். விவசாய நிலங்களுக்கு மின்வேலி அமைப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடுகளை செய்யலாம். மின்வேலி அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். யானைகளை பாதுகாக்க அரசு தீவிரம் காட்ட வேண்டும். இல்லையென்றால் அடுத்த 10 ஆண்டுகளில் யானைகள் காணாமல் போய்விடும், அவற்றை பார்க்க முடியாது நிலை ஏற்பட்டு விடும் என்றனர்.

அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறேன் என்றார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த வழக்கு இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

The post பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் யானைகளை பார்க்க முடியாது: சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு கருத்து appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,Chennai High Court ,Session ,
× RELATED சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனை...