×

தும்மனட்டி பண்ணையில் குப்ரஸ் நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் தீவிரம்

 

ஊட்டி, நவ.29: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள, பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும், பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பழங்கள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வது மட்டுமின்றி, ஜாம், ஊறுகாய் மற்றும் பழ ரசங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர விவசாயிகளுக்கு தேவையான பல்வேறு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி அருகே உள்ள தும்மனட்டி தோட்டக்கலைத்துறை பண்ணையில் குப்பரஸ், சாம்பிராணி, சில்வர் ஓக் உட்பட பல்வேறு வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவைகள், குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காக தற்போது தும்மனட்டி பண்ணையில் குப்ரஸ் நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, விதைகள் பதப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த விதைகள் நடவு செய்யப்பட்டு நாற்று உற்பத்தி செய்யப்படும். அதன்பின், இவைகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்.

The post தும்மனட்டி பண்ணையில் குப்ரஸ் நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Cyprus ,Tummanati ,Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்