×

ஆம்னி பஸ்சில் தீ

நல்லம்பள்ளி: பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆம்னி பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகளை ஏற்றாமல் காலியாக டிரைவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள கெங்களாபுரம் மேம்பாலத்தின் மீது நேற்று மதியம் வந்தபோது, திடீரென பஸ்சினுள் இருந்து கரும்புகை வந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட டிரைவர் அப்துல் அமீது, தேசிய நெடுஞ்சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு, மாற்று டிரைவருடன் கீழே இறங்கிவிட்டார். சிறிது நேரத்தில் தீ மளமளவென பஸ் முழுவதுமாக பரவியது. தீயணைப்பு துறை வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

The post ஆம்னி பஸ்சில் தீ appeared first on Dinakaran.

Tags : Omni bus fire ,Nallampally ,Bengaluru ,Pollachi ,Omni bus ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் சிக்கிய நாகாவதி அணை