×

அகஸ்தீஸ்வரத்தில் கால் இடறி விழுந்தவர் பலி

தென்தாமரைகுளம்: நவ.29: அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் தெய்வ குமார்(50), ஆசாரி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 21ஆம் தேதி, வேலை விஷயமாக வெளியே சென்றவர் திரும்பி வரும்போது கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அங்கிருந்த கான்கிரீட் சுவரில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதைக்கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தெய்வ குமார் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பத்மாவதி கொடுத்த புகாரின்படி தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அகஸ்தீஸ்வரத்தில் கால் இடறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Agastheeswaram ,Thendamaraikulam ,Deiva Kumar ,Pallikoda Street, Agastheeswaram ,
× RELATED அகஸ்தீஸ்வரம் தாசில்தார் பொறுப்பேற்பு