×

பல்வேறு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

ஸ்ரீபெரும்புதூர்: சோமங்கலம் அருகே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் அருகே சோமங்கலம், எருமையூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மேத்யூ (37). இவன், மீது மணிமங்கலம், சோமங்கலம் காவல் நிலையங்களில், 7 கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரபல ரவுடி மேத்யூ, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான லெனின் கோஷ்டிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு, இருதரப்பினரும் மாறி, மாறி கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

பிரபல ரவுடியான மேத்யூ, லெனின் ஆகியோர், போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பிக்க, கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு லெனின், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். இதனால் போலீசார், மேத்யூவை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருவதாக, சோமங்கலம் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார், பிரபல ரவுடி மேத்யூவை நேற்று முன்தினம் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பல்வேறு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Somangalam ,Dinakaran ,
× RELATED அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு