×

பொடவூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

ஸ்ரீபெரும்புதூர்: பொடவூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் பொடவூர் கிராமத்தில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை, ஸ்ரீபெரும்புதூர் கால்நடை மருந்தகம் சார்பில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா ரவி தலைமை வகித்தார். துணை தலைவர் ஜோதி ஜெயவேல் வரவேற்றார். ஸ்ரீபெரும்புதூர் கால்நடை மருந்தக மருத்துவர் சுதா, உதவியாளர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு, சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில், பொடவூர் கிராமத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கபட்டது. நிகழ்வின்போது வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பொடவூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Bodavoor village ,Sriperumbudur ,Union committee ,president ,Karunanidhi ,Podavoor village ,Sriperumbudur Union ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் முதல்...