×

உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து மின்சாதனங்கள் பழுது

மதுராந்தகம்: கொளத்தூர் கிராமத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால், வீடுகளில் உள்ள டிவி, பேன், மின் மீட்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் பழுதாகின. செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம் 23 கொளத்தூர் கிராமத்தில் 11 கேவி உயர் மின்னழுத்த மின்சாரம் செல்லக்கூடிய வீடுகளுக்கு செல்லும் மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதனால், கிராமத்தில் உள்ள வீடுகளில் மின்சார மீட்டர்கள் வெடித்து, தெரு விளக்குகள், டிவிகள், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதானது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் மின் வாரியத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக உயர் மின்னழுத்த மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், அப்பகுதிக்கு சென்ற மின் வாரிய ஊழியர்கள் உயர் மின்னழுத்த மின்சார கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், வீடுகளுக்கு செல்லும் மின்சார வயரையும் சரி செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது. அப்போது, சேதமடைந்த மின் மீட்டர்களை மின்சார வாரியத்துறையே இலவசமாக வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து மின்சாதனங்கள் பழுது appeared first on Dinakaran.

Tags : Madhuranthakam ,Kolathur ,
× RELATED மதுராந்தகம் அருகே கருங்குழியில்...