×

மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு மூன்று சக்கர வாகன பேரணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து அறிவெளி கலைக்குழு மூலம் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் மற்றும் டின் ரயிட்ஸ் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு மூன்று சக்கர வாகன பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான மூன்று சக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Census Awareness Rally for People with Disabilities ,Kanchipuram ,Collector ,Kalichelvi Mohan ,Census Awareness Rally for People with Disabilities: ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி...