×

வாகன சோதனையில் எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி: ரவுடி கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பெத்திக்குப்பம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்ட போது திடீரென ஒரு வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றது. அதை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் துரத்தி சென்றார். உடனே, அதில் வந்த வாலிபர் காரை நிறுத்தி கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை குத்த முயன்றார். சுதாரித்துக்கொண்ட அவர் லாபகமாக வாலிபரை பிடித்தார். பின்னர், கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் கொண்டு வந்தார். விசாரணையில், பெத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பரத் என்ற சிவபரத் என்பதும், இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் பரத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வாகன சோதனையில் எஸ்.ஐ.,யை கொல்ல முயற்சி: ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : S.I. ,Kummidipoondi ,Sub ,Inspector ,Bhaskar ,SI ,Rowdy ,Dinakaran ,
× RELATED தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி...