×

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் உள்ள மேலகரமனூர், நந்திமங்கலம், தேவந்தவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு, அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய அவைத்தலைவர் வி.கே.சக்கரவர்த்தி மற்றும் முன்னாள் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தில்லைகுமார் தலைமையில் 6 தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், இனிப்பு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் பாபு, பால் சுதாகர், வெங்கடாத்திரி, குப்பன், ஸ்ரீராம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் விஜயன், ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் ராமராவ், ரஞ்சித், எட்வர்ட் துரை, மதன், கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் முனுசாமி, மகேஷ், முனுசாமி, குப்புசாமி, மனோகரன், பரமசிவம், வேலு, அழகேசன், சம்பத், வழக்கறிஞர் பிரகாஷ், இன்பராஜ், முரளி, நாராயணன், பாண்டியன், துளசிராமன், ராஜசேகர், டில்லி, கார்த்தி, பிரகாஷ் தனசுந்தரம், பூபாலன், குப்பன், சரத், மதி, இறையரசன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Oothukottai ,DMK ,Melakaramanoor ,Nandimangalam ,Devanthavakkam ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...