×

சேதம் அடைந்த மின்கம்பத்தால் விபத்து பீதி

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தேவி மீனாட்சி நகர், மழலையர் தெரு அருகே 10 வருடங்களாக மிகவும் சேதம் அடைந்த நிலையில் கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் 3 மின்கம்பங்கள் முக்கோணம் போல் இணைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, வடகிழக்கு பருவமழை மற்றும் தொடர் மழை காரணமாக எந்த நேரத்திலும் மின்கம்பங்கள் சரிந்து கீழே விழும் நிலையில் உள்ளன. இதனால் அவ்வழியாக தினமும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.

தற்போது மழைக்காலம் என்பதால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள், மின்கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மின்வாரிய அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post சேதம் அடைந்த மின்கம்பத்தால் விபத்து பீதி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Devi ,Meenakshi Nagar ,Tiruvallur Municipality ,Malalaiyar Street ,Dinakaran ,
× RELATED செங்கல்சூளை தொழிலாளர்களின்...