×

திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருத்தணி: திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக முகவர்கள் பிஎல்ஏ 2 ஆலோசனை மற்றும் பயிற்சி கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சி.ஜெயபாரதி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் களம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஆர்.ராஜா கலந்துகொண்டு பாக முகவர்களுக்கு படிவங்களை பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து விளக்கினார். செயல்முறை விளக்கத்தையும் அளித்தார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், சண்முகம், நீலாவதி சீனிவாசன், தினகரன், செந்தில்குமார், ஜெகதீசன், நந்தகுமார், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் ஞானமூர்த்தி, தானியல், அப்துல் ரஹீம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvalangadu East Union DMK ,Tiruvalangadu ,East Union DMK ,Dinakaran ,
× RELATED திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில்...