×

ஜெயிலர் மகனிடம் லேப்டாப் திருட்டு

அண்ணாநகர்: புழல் மத்திய சிறையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பெரியசாமி (62). இவர், புழல் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகன் இன்பசேகரன் (30), பெங்களூவில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சென்னை வந்திருந்த இன்பசேகரன், நேற்று முன்தினம் மீண்டும் பெங்களூரூ செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.

அங்கு, 2வது பிளாட்பாரத்தில் உள்ள பெங்களூரூ செல்லும் பஸ்சில் ஏறி, தனது இருக்கையின் மீது லேப்டாப்பை வைத்துள்ளார். பின்னர், அங்குள்ள கடையில் டீ சாப்பிட சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது, அவரது லேப்டாப் திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெயிலர் மகனிடம் லேப்டாப் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Periyasamy ,Puzhal Central Jail ,Puzhal ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் ஏலம்