×

ஸ்ரீநிகேதன் பள்ளியில் ‘அன்வேஷனம்’ கண்காட்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ”அன்வேஷனம்” என்ற தலைப்பில் தொடக்க கல்வி மாணவர்கள் நடத்திய கண்காட்சி நடந்தது. கண்காட்சி திறப்பு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ப.விஷ்ணுச்சரண் தலைமை தாங்கினார். முதன்மை செயல் அலுவலர் பரணிதரன், முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், துணை முதல்வர் கவிதா கந்தசாமி முன்னிலை வகித்தனர். தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர் சுஜாதா வரவேற்றார்.
விழாவில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.லதா மகேஸ்வரி, மாவட்ட சமக்ரா சிக்ஷா உதவி திட்ட அலுவலர் வி.பாலமுருகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர். மேலும், சம தர்மத்தோடும், சமாதானத்தோடும் அனைவரும் சமம் என்கின்ற நிலையை எடுத்துரைக்கும் விதமாக மாணவர்கள் ஆற்றிய சொற்பொழிவும், ஓவியங்கள், கணித சூத்திரங்கள், அறிவியல் ஆய்வுகள், மனித நேயத்தை உணர்த்தும் பொம்மலாட்டம், மற்றும் நாடகங்கள், நல்லிணக்கம், நல்லெண்ணத்தை வளர்க்கும் பாடல்கள் ஆகியவை சிறப்பு விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாணவர்களின் செயல் திட்டங்கள் அனைத்தும் பள்ளியின் 25 வகுப்பறைகளில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.

The post ஸ்ரீநிகேதன் பள்ளியில் ‘அன்வேஷனம்’ கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Invention' ,Sriniketan School ,Thiruvallur ,Enveshanam ,Sri Niketan Matric Higher Secondary School ,Enveshanam' Exhibition ,Sriniketan ,School ,
× RELATED புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில்...