×

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இதுவரை 7 லட்சம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல கால பூஜைக்கு நடை திறந்த 12 நாட்களில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகால பூஜைகள் கடந்த 17ம் தேதி தொடங்கின. நடை திறந்த அன்று முதல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று வரை கடந்த 12 நாட்களில் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று மட்டும் 51,038 பேர் ஆன்லைனில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று தரிசனம் செய்து திரும்பினர். இந்த மண்டல சீசனில் கடந்த 25ம் தேதி தான் மிக அதிகமாக 70 ஆயிரம் பேர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் சபரிமலையில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். இதற்கிடையே நேற்று சபரிமலையில் போலீசின் 2வது குழுவினர் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். சன்னிதானத்தில் எஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு கூடுதல் எஸ்பி, 10 டிஎஸ்பிக்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 125 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1450 போலீசார் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

The post சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இதுவரை 7 லட்சம் பேர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,
× RELATED சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு...